ஆஸ்திரேலியாவில் வேலையின்மை வீதம் நவம்பர் மாதம் 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. ஒக்டோபர் மாதம் வேலையின்மை வீதம் 4.1 வீதமாக பதிவாகி இருந்தது.
புள்ளிவிபர திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.
வேலையில்லாதோரின் எண்ணிக்கை 27 ஆயிரமாக குறைவடைந்துள்ளது.
எனினும் வருட இறுதியில் வேலையின்மை வீதம் 4.3 வீதமாக உயரக்கூடும் என மத்திய வங்கி கணித்துள்ளது.