உக்ரைன்மீதான ரஷ்ய படையெடுப்பையடுத்து தலைநகர் கெய்விலில் மூடப்பட்ட தனது நாட்டு தூதரகத்தை மீள திறப்பது தொடர்பில் ஆஸ்திரேலியா பரிசீலித்துவருகின்றது.
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளுக்கு பின்னர், உரிய மதிப்பாய்வுகளின் அடிப்படையிலேயே தூதரகத்துக்கு அதிகாரிகள் அனுப்படுவார்கள் என தெரியவருகின்றது.
எனினும், தூதரகம் எப்போது திறக்கப்படும் என்பதற்குரிய கால எல்லையை வெளிவிவகார அமைச்சு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
"தூதரகத்தை திறக்கும் நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பெனிவோங் கூறியுள்ளார்.
2022 பெப்ரவரியில் உக்ரைன்மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்தது. அப்போது ஆஸ்திரேலியாவை ஆண்ட மொரிசன் அரசாங்கம், உக்ரைன் தலைநகரில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதிகாரிகள் அனைவரும் போலந்து நாட்டுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தமது நாட்டில் தூதரக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஆஸ்திரேலியாவிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் அறிந்ததே.