ஜெரால்டன் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆணொருவருக்கும், பெண்ணுக்கும் இடையில் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட கைகலப்பில் 50 வயது ஆண் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
30 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.