14 வயதான ஆஸ்திரேலிய சிறுவனொருவர், தாய்லாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவரொருவரே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் சுற்றுலா நகரமான பட்டாய பகுதியிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டுள்ள சிறுவனின் தந்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் எனவும், தாய், தாய்லாந்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
கத்திக்குத்து தாக்குதலை நடத்திய சிறுவனும், உயிரிழந்த சிறுவனும் ஒரே வகுப்பில் கல்வி பயின்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கொலையில் முடிந்துள்ளது எனக் கூறப்படுகின்றது. தாக்குதல் நடத்திய இருவன்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.