Northern Territory பிராந்தியத்தில் ஆட்சி அதிகாரத்தை லேபர் கட்சி இழந்துள்ளது.
NT இல் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Country Liberal கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.
தேர்தல் தோல்வியால் முதல்வர் பதவியை இழந்துள்ள Eva Lawler, தனது தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார்.
“ பகுதியை பாதுகாப்பான பிரதேசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.” என்று புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள Lia Finocchiaro அறிவித்துள்ளார்.
“ சமூக பாதுகாப்பை மீட்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
“ குற்றங்களைக் குறைப்பதற்கும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.” – எனவும் Lia Finocchiaro குறிப்பிட்டுள்ளார்.