ஆஸ்திரேலியாவில் 2023-24ல் 446,000 புலம்பெயர்ந்தோர் குடியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் (ABS) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதே சமயம் 2022-23 நிதியாண்டில் 536,000 பேர் குடியேறியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்த வீழ்ச்சியானது 2021-22ல் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து நிகர வெளிநாட்டு குடியேற்றத்தின் முதல் வருடாந்திர வீழ்ச்சியைக் குறிக்கிறது" என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலக இடம்பெயர்வு புள்ளிவிவரங்களின் தலைவர் ஜென்னி டோபக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை ஆண்டுக்கு 160,000 ஆக குறைப்பதாக உறுதியளித்தார், ஆனால் சமீபத்தில் அந்த வாக்குறுதியிலிருந்து விலகிவிட்டார்.
செப்டம்பர் 2023 வரையிலான 12-மாத காலப்பகுதியில், 556,000 பேர் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியா தனது மிக உயர்ந்த நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் 2022-23 உடன் ஒப்பிடும்போது 2023-24 இல் புலம்பெயர்ந்தோர் வருகை 10 சதவீதம் குறைந்துள்ளது,
புலம்பெயர்ந்தோர் புறப்பாடு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிற்கு 667,000 புலம்பெயர்ந்தோர் வருகை தந்துள்ளனர். நான்கில் மூன்று பேர் தற்காலிக விசாவில் வந்தவர்கள் (465,000). தற்காலிக விசா வைத்திருப்பவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் சர்வதேச மாணவர்கள் (207,000). 2023-24 இல் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 221,000 பேராக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டு 204,000 ஆக இருந்தது.
2023-24 ஆம் ஆண்டில் தற்காலிக மாணவர் விசாக்களில் புலம்பெயர்ந்தோர் புறப்படுவது முந்தைய ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது,” என்று திருமதி டோபக் கூறினார்.
சபா.தயாபரன்.