மெல்பேர்ண் மேற்கில் உள்ள இயந்திரங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ஷைனில் உள்ள கடையில் நேற்று இரவு 8 மணியளவில் தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த 50 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இத் தீ விபத்தில் சிக்கிய ஒருவர் உடலில் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறார்.
கட்டிடம் முற்றாக சேதமடைந்ததாக தெரிய வருகிறது. மற்றும் தீ விபத்துக்கான காரணத்தை தீயணைப்பு வீரர்களால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் கட்டிடம் தற்போது கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பற்றதாக உள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.