சிட்னி விமான நிலையத்துக்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் மூன்றாம் தரப்பு தொடர்புபட்டுள்ளதா என நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 33 வயதுடைய Zhuojun 'Sally' Li என்பவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவரும் காணாமல்போயுள்ளார். அவரின் நிலை குறித்தும் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். அவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
இந்நிலையில் இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள தரப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டுவருகின்றது.