நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் எழுவர் பலி!
நியூ வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற விபத்துகளில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து இவ்வருடம் இதுவரையில் விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கிரென் பெல் அருகே ஜீப் ரக வாகனமொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் இருவர் உயிரிழந்தனர். நேற்று மாத்திரம் விபத்துகளில் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துகளில் உயிரிழந்துள்ள எழுவரில் அறுவர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 26 வயது இளைஞர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
விடுமுறை காலத்தில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன. இம்முறை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டுவரை இப்பாதுகாப்பு பொறிமுறை அமுலில் இருக்கும்.