விக்டோரிய மாநில பொருளாளர் டிம் பல்லாஸ் பதவி விலகியுள்ளதுடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த டிம், 2014 ஆம் ஆண்டு முதல் பொருளாளர் பதவியை வகித்துவருகின்றார்.
தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியே அரசியலுக்கு விடை கொடுக்கும் முடிவை எடுத்ததாகவும், இதுவரை காலமும் மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு பெரும் பாக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் உதவி பொருளாளராக செயற்படும் டேனி பியர்சன், புதிய பொருளாளராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.