"பாலி நைன்" என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் எஞ்சிய ஐந்து உறுப்பினர்கள், இரு தசாப்தங்கள் இந்தோனேசியாவில் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், நேற்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முற்பட்ட இவர்கள் 2005 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தில் கும்பலின் இரு பிரதான சந்தேகநபர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒருவர் 2018 இல் உயிரிழந்தார்.
இந்நிலையிலேயே எஞ்சியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும்இடையில் அண்மையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.
மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பட்ட குறித்த நபர்களுக்கு, ஆஸியில் தண்டனை எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.