விக்டோரிய மாநிலத்தில் போராட்டங்களின்போது முகமூடி மற்றும் ஆள் அடையாளத்தை மறைக்கும் வகையிலான மாஸ்களை அணிவதற்கு தடை விதிக்கப்படும் என்று மாநில பிரீமியர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.
மெல்பேர்ணில் தொடர்ச்சியாக நடைபெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களையடுத்து, அத்தகையை சம்பவங்களை ஒடுக்குவதற்கு விக்டோரிய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்ஓர் அங்கமாகவே போராட்டங்களின்போது முகமூடிகள் மற்றும் மாஸ்களை அணிவதற்கும், தடைவிதிக்கப்படவுள்ளது.
அத்துடன், ஹமாஸ், ஹிஸ்புல்லா உட்பட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் கொடி மற்றும் சின்னங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்தவதற்கும் தடைவிதிக்கப்படவுள்ளது.
அதேபோல வழிபாட்டு தலங்களுக்கு முன்பாக போராட்டங்களை நடத்தவதற்கு தடை விதிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.