சிட்னி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள பூங்காவொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
33 வயதான எனும் பெயருடைய பெண் டிசம்பர் 9 ஆம் திகதி பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.
காணாமல்போய் இருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின்னரே அவர சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அப்பெண்ணின் கணவரும் காணாமல்போய் இருந்தார். இதனையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்குரிய விசாரணை ஆரம்பமாகியது.
இந்நிலையிலேயே தற்போது அவரும் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகின்றது. அவரின் சடலமும் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவியின் சடலம் காணப்பட்ட பகுதிக்கு சற்று தொலைவிலேயே இவரது சடலமும் காணப்பட்டுள்ளது.
இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் பலகோணங்களில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.