2020 ம் ஆண்டு காலப் பகுதியில் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு குவாண்டாஸ் 120 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க உள்ளது.
தொற்று காலங்களின் போது குவாண்டாஸ் சாமான்கள் கையாளுபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்கள் 1800 க்கும் மேற்பட்டவர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு குவாண்டாஸ் 120 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கும்.
அக்டோபரில் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று முன்னாள் ஊழியர்களுக்கு மொத்தம் 170,000 டொலர்கள் வழங்க பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இழப்பீடு தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக விமான நிறுவனம் இன்று அறிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எங்கள் உண்மையான மன்னிப்புகளை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று குவாண்டாஸ் தலைமை நிர்வாகி வனேசா ஹட்சன் கூறினார்.
அதன் 2024 ஆண்டு அறிக்கையில், இந்த வழக்கு தொடர்பாக எதிர்பார்க்கப்படும் செலவுகளுக்கு கூடுதலாக $70 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக குவாண்டாஸ் கூறியது - இந்த ஆண்டு அதன் லாபம் $1.7ல் இருந்து $1.25 பில்லியனாக குறைந்ததற்கான காரணங்களில் இது ஒன்றாகும்.
சபா.தயாபரன்.