ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்குக்கும், நேட்டோ அமைப்பின் செயலாளருக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
உக்ரைனுக்கான ஆதரவு, பசுபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடும் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு ஆதரவளித்துவரும் நிலையில், தமது ஆதரவும் தொடரும் என வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் நேட்டோ அமைப்புடன் ஆஸ்திரேலியா இணைந்து செயற்படும் எனவும் பெனி வோங் உறுதியளித்துள்ளார்.