ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அளவில் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்ட இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ணைச் சேர்ந்த ஸ்டீபன் மிஸ்ஸீ என்பவருக்கு 32 ஆண்டுகளும், ரோட்ரிக்ஸ் என்பவருக்கு 21 வருடங்களும் இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இவ்விருவரும் குறித்த போதைப்பொருளை இறக்குமதி செய்துள்ளனர்.
2019 ஏப்ரல் மாதம் ஸ்பீக்கர்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.6 டன் மெத்தம்பெட்டமைன் மற்றும் 37 கிலோ ஹெரோயின் என்பன எல்லை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து 2019 டிசம்பரில் இருவரும் கைது செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே இன்று சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.