'Angel of Death' என்றழைக்கப்படும் சிட்னி நிழல் உலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய Tarek Ayoub எனும் பாதாள குழு உறுப்பினரே இன்று அதிகாலை Parramatta வில் உள்ள unit வளாகத்தின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அதிகாலை 3.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு அவசர சேவை பிரிவுகள் அழைக்கப்பட்டன.
Tarek Ayoub மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு துணை மருத்துவர்கள் முதலுதவி அளிக்க முற்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
Tarek Ayoub நண்பரொருவரை சந்திப்பதற்கு சென்றவேளையிலேயே அவர் இலக்குவைக்கப்பட்டுள்ளார் என நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
இது இலக்கு வைக்கப்பட்ட கொலைச் சம்பவம் என சந்தேகிக்கும் பொலிஸார், ஒன்றுக்கு மேற்பட்டோர் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெறுகின்றது.