ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவோங்மீது இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியா முறையற்ற அணுகுமுறையையே பின்பற்றியுள்ளது எனவும் இஸ்ரேல் தரப்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை வழங்கவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
அதுமட்டுமல்ல ஐ.நாவில் நடைபெற்ற வாக்கெடுப்புகளின்போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவே அதாவது ஐநாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு சார்பாகவே ஆஸ்திரேலியா வாக்களித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், ஆஸி. வெளிவிவகார அமைச்சர்மீது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.