விக்டோரிய மாநில அரசின் புதிய பொருளாளராக ஜாக்லின் சைம்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.
விக்டோரிய மாநிலத்தில் பொருளாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை இதன்மூலம் அவர் பெறவுள்ளார்.
புதிய பொருளாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.
விக்டோரிய மாநிலத்தில் நீண்டகாலம் பொருளாளர் பதவியை வகித்த டிம் பல்லாஸ் கடந்த வாரம் பதவி விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பையும் விடுத்தார்.
இந்நிலையிலேயே புதிய பொருளாளராக சைம்ஸ் நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 ஆம் ஆண்டு முதல் சட்டமா அதிபராக பதவி வகித்துவருகின்றார்.