குழந்தைகள் முன்னிலையில் தனது மனைவியை கோடரியால் வெட்டிக்கொலை செய்த கணவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
47 வயதான தினுஷ் குரேரா என்பவருக்கே விக்டோரிய உயர்நீதிமன்றத்தால் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும் என நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ணிலுள்ள வீட்டில் வைத்தே 2022 டிசம்பர் 3 ஆம் திகதி தனது மனைவியான நெலோமி பெரேராவை, கணவர் கோடரி மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின்போது அவரின் இரண்டு குழந்தைகளும் சாட்சியமளித்திருந்தனர்.