தென்பசுபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அங்கு சிக்கித் தவித்த ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.
நேற்று இரவுவரை 148 பேர் இவ்வாறு நாடு திரும்பினார்கள் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய விமானப்படையினர் விமானங்கள் ஊடாகவே அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதேவேளை வனுவாட்டு நாட்டில் வணிக விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ஆஸ்திரேலியா உதவிகளை வழங்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.