மெல்பேர்ண் மொறிங்ரன் அவளை குடா தீபகற்பத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 வயது யுவதி ஒருவரும், 29 வயது இளைஞர் ஒருவருமே துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.
டிசம்பர் 02 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இன்று வாக்குமூலம் பெறப்படுகின்றது.
பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.