தமது 6 வயது மகனுக்கு புற்றுநோய் இருப்பதாக பிரசாரம் செய்து, நிதி மோசடியில் ஈடுபட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடிலெய்டு பகுதியைச் சேர்ந்த பெற்றோரே, மகனுக்கு புற்றுநோய் இருப்பதாகக்கூறி போலி ஆவணங்களை தயாரித்து, சிகிச்சைக்கென நிதி திரட்டி வந்துள்ளனர்.
இரு வாரங்களுக்குள் அவர்கள் 60 ஆயிரம் டொலர்களை திரட்டியுள்ளனர்.
நவம்பர் 26 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெற்றோரை டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்தனர்.
தனது மகனுக்கு மொட்டையடித்து, சக்கர நாய்காலிலில் அமரவைத்து அவர் சிகிச்சை பெறுவதுபோல் படங்களையும் எடுத்துள்ளனர். அந்த படங்களையே நிதி திரட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை தந்தைக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. தாய் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
2025 ஜனவரி மாதம் இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.