உலகின் மிகப்பெரிய விமானப் பயண மர்மங்களில் ஒன்றான மலேசியாவின் MH370 விமானம் காணாமல்போய் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், விமானப் பாகங்களை தேடும் பணியை மீள ஆரம்பிப்பதற்கு மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தகவலை மலேசிய போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தென்னிந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதலை
ஆரம்பிப்பதற்குரிய யோசனை 2018 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 15 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட புதிய பகுதியில் தேடுதல் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
பல நிபுணர்களிடமிருந்து சாத்தியமான இடங்கள் பற்றி பரிந்துரைகப் பெறப்பட்டன எனவும், அதற்கமைய தேடுதல் பணி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆஸ்திரேலியர்கள் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் மலேசியா கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வழியில் விமானம், 2024 மார்ச் 8 ஆம் திகதி மாயமானது.
விமானத்துக்கு என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. விமானப் பாகங்களை தேடுவதற்குரிய நடவடிக்கை பல வருடங்களாக தொடர்ந்த நிலையில், தற்போது மீளவும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.