சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று Northern Territory பிராந்தியத்தில் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள Lia Finocchiaro தெரிவித்தார்.
Northern Territory பிராந்தியத்தில் நடைபெற்ற தேர்தலில் லேபர் கட்சியை தோற்கடித்து, Country Liberal கட்சி வெற்றிபெற்றுள்ளது.
புதிய முதல்வராக விரைவில் Lia Finocchiaro பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
முதல்வரின்கீழ் பொலிஸ் அமைச்சு இருக்கும் என்ற தகவலையும் வெளியிட்டார்.
சமூக பாதுகாப்பே எமது முன்னுரிமை பணியாகும் எனவும், இதனை உருவாக்க பொலிஸாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறார் மத்தியிலான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் Lia Finocchiaro தெரிவித்துள்ளார்.