கன்பரா நகரின் உள்-தெற்கு பகுதியிலுள்ள யர்ரலும்லாவுக்கு அருகிலுள் பர்லி கிரிஃபின் ஏரியில் இன்று படகு ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை அடுத்து 12.30 மணியளவில் காவல்துறைக்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரால் மூழ்கிய படகில் இருந்த 12 பேர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பத்திரமாக மீட்கப்பட்டதாக கான்பெராவின் கடல்சார் காவல் துறை தெரிவித்தனர்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அருகிலுள்ள கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் ஏரியை சுற்றி சுற்றுலா சென்றதாகவும் படகு மூழ்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, இருப்பினும் உல்லாசப் படகில் ஒரு சில உபகரணங்கள் செயலிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.