ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்திவந்த ஜப்பான் பிரஜையொருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் இருந்து நேற்று முன்தினம் பேர்த்வந்த விமானத்திலேயே அவர் 9 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை எடுத்துவந்துள்ளார்.
பேர்த் விமான நிலையத்தில் அவர் கொண்டுவந்த சூட்கேஸ்களை பரிசோதனை செய்தபோது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கை செய்யப்பட்ட ஜப்பான் பிரஜை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் பேர்த் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. ஜனவரி 13 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தப்படவேண்டும்.