கடுமையான குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பிணையில் விடுவிக்கப்படும்போது அவர்களுக்கு மின்னணு கணுக்கால் வளையங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளது.
கன்பரா லிபரல்கள் கூட்டத்திலேயே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பைக்கருதியே இதற்கான முன்மொழிவு முன்மொழியப்பட்டுள்ளது என்று Australian Capital Territory எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிணை நிபந்தனைகள்மீறப்படுவது க்ரீமினல் குற்றமாக கருதப்பட வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
Australian Capital Territory பொலிஸ் தரவுகளின் அடிப்படையில் கடந்த வருடம் நடுப்பகுதியில் இருந்து பிராந்தியத்தில் குற்றச் செயல்கள் குறைந்துவருகின்றன .
இவ்வருடம் ஏப்ரல் முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் 6,566 குற்றங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 8,998 குற்றங்கள் பதிவாகி இருந்தன.