Tasmania வில் 6 கிலோ போதைப்பொருளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கடத்த முற்பட்டனர் எனக் கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கப்பல் ஊடாகவே இவர்கள் MDMA வகையை சேர்ந்த போதைப்பொருளை கடத்த முற்பட்டவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது இதுவரை ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 93 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹெரோயின், கஞ்சா உட்பட சட்டவிரோத போதைப்பொருள் பாவனை ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவருகின்றது.