சிட்னிக்கு 34 கிலோ மெத்தாம் பேட்டமைன் போதைப்பொருளை கடத்திய 30 வயதான கிரேக்க நாட்டவர், நியூ சவூத் வேல்ஸ் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன உதிரிபாகங்களுக்குள் மறைத்தே போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே சூத்திரதாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, 2023 – 2024 நிதியாண்டில் மாத்திரம் 11 தொன் மெத்தாம் பேட்டமைன் போதைப்பொருளை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மருந்துகள் உட்பட மொத்தமாக 33.7 தொன் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.