மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியிலுள்ள தபால் நிலையத்துக்குள் புகுந்து 80 இற்கு மேற்பட்ட பொதிகளை கொள்ளையடித்துச்சென்றுள்ள நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
டிசம்பர் 17 ஆம் திகதி தபாலகத்தை உடைத்து உள்ளே சென்ற குறித்த நபர், அங்கிருந்த பொதிகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அனுப்பட்ட பொருட்களும் அங்கு இருந்துள்ளன.
இந்நிலையில் அவை களவாடப்பட்டுள்ளமை குறித்து அனுப்பியவர்கள் கடும் கவலையில் உள்ளனர். சிலர் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில்கூட முக்கிய பரிசில்களை அனுப்பிவைத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு கொள்ளையரை கண்டுபிடிப்பதற்குரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.