குயின்ஸ்லாந்தில் நுளம்புகள்மூலம் பரவும் நோய்களின் தாக்கம் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், குயின்ஸ்லாந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“ ஈரமான வானிலை கொசுக்களின் இனப்பெருக்க எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.” என்று குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் ஹெய்டி கரோல் தெரிவித்தார்.
“ ஈரமான மற்றும் வெப்பமான காலநிலையில் கொசுக்களின் எண்ணிக்கை எப்பொழுதும் கணிசமாக அதிகரிக்கிறது, மேலும் குயின்ஸ்லாந்து மக்கள் இப்போது தொடங்கும் கொசுக் கடிக்கு எதிராக கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்," எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சபா.தயாபரன்.