கிறிஸ்துமஸ் தினமாகிய இன்று தமது உறவுகளுடன் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், தீ அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக தமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தியாகம் செய்து, தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருவது சமூகமட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிளாக் கோடை காட்டுத்தீக்குப் பிறகு மாநிலம் எதிர்கொள்ளும் மிக மோசமான நிலைமை இதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுமார் நூற்றுக்கணக்கான தீயணைப்பு படையினர் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடத் தயாராகி வருகின்றனர். தீ கட்டுக்குள் வராமல் வடக்கு திசையில் பயணித்து வருகிறது.
பெல்லென், பிளாக் ரேஞ்ச், கிரேட் வெஸ்டர்ன், ஜல்லுக்கார், லேக் ஃபியன்ஸ், லண்டன்டெரி, மொய்ஸ்டன், ரைம்னி மற்றும் வில்லுரா நார்த் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள பிற இடங்கள் அபாய வலயங்களாக உள்ளன. எனவே, தேவைப்பட்டால் வெளியேற தயாராகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.