Northern Territory தேர்தலில் Country Liberal கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி கட்சி தலைவர் Lia Finocchiaro முதல்வராக பதவியேற்பார். பொலிஸ் அமைச்சு பதவியை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
Northern Territory இல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி, சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அவர் பொலிஸ் அமைச்சை குறிவைத்துள்ளார்.
கட்சியின் துணை தலைவர் Gerard Maley
பாதுகாப்பு தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
Bill Yan பொருளாளராக நியமிக்கப்படலாம் எனவும் ,Jo Hersey கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுகாதாரம் உட்பட ஏனைய அமைச்சு பதவிகளுக்கு கட்சிக்குள் போட்டி நிலவுகின்றது.