விக்டோரியா, Ballarat பகுதியில் ஆணொருவரை குத்திக் கொலை செய்தார் எனக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8 மணியளவிலேயே இக்கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துணை மருத்துவர்கள் காயமடைந்த நபருக்கு முதலுதவி அளித்தாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.