பேர்த்திலுள்ள ஹோட்டலொன்றிலிருந்து 200 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்டோரியாவை சேர்ந்த 48 வயது நபரொருவரும், தென்னாபிரிக்காவை சேர்ந்த 44 வயதான நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறையை சோதனையிட்டபோது அங்கிருந்து 200 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.