நீரில் மூழ்கிய தமது மகளை காப்பாற்ற முற்பட்ட தம்பதியினர் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று மேற்கு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
பேர்த்தை சேர்ந்த தம்பதிகளான வைத்தியர் மொஹமட் சபான், சப்ரினா மொஹமட் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் விடுமுறையாக் கொண்டாடுவதற்காக தமது குடும்பம் சகிதம் இவர்கள் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தவேளை இளைய மகள் நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கு பெற்றோர் முயற்சித்தவேளை அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மகளும் இறந்துவிட்டார்.
இவர்களை காப்பாற்ற முற்பட்ட மற்றுமொரு நபர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர்கள் பங்களாதேஷ் வம்சாவளியைச் சார்ந்தவர்களாவர்.