சிட்னி மேற்கில் 31 வயது நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவிலேயே குறித்த நபர் அவரது வீட்டுக்கு முன்னால் காரில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கிடையிலான மோதலின் விளைவாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 33 வயது நபரொருவரை இன்று காலை கைது செய்தனர். அவர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோருக்கும் பொலிஸாரால் வலை விரிக்கப்பட்டுள்ளது.