ஆஸ்திரேலியாவில் மாதாந்த பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது. இதன்படி ஜுலை மாதத்துக்குரிய பணவீக்கம் 3.5 வீதமாக பதிவாகியுள்ளது என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜுன் மாததத்தில் மாதாந்த பணவீக்கம் 3.8 வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் இவ்வாறு குறைவடைந்திருந்தாலும் வட்டி வீதம் குறைக்கப்படுமா என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
மத்திய வங்கி கூடும்போதே இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளது.