ரஷ்யாமீது, 68 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதலை நடத்திய நிலையில், அவை அனைத்தையும் ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் இன்று ஆயிரத்து 41வது நாளாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையிலேயே ரஷியா மீது நேற்று இரவு 68 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ட்ரோன்கள் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.