ஆஸ்திரேலிய விசாவுக்காக காத்திருந்த பெற்றோர்களில் 2,300 பேர் உயிரிழப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்காக விசாவுக்கு விண்ணப்பித்து காத்திருந்த பெற்றோர்களில் சுமார் 2 ஆயிரத்து 300 விண்ணப்பதாரிகள் இறந்துவிட்டனர் என உள்துறை அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு தங்கள் பெற்றோரை அழைத்து வர விரும்பும் புலம்பெயர்ந்த குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி கிட்டுவதில் கால தாமதம் நீடிக்கின்றது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றோர் விசாவுக்காக காத்திருந்தவர்களில் 2,300 பேர் உயிரிழந்துவிட்டனர்.
வருடாந்த பெற்றோர் விசா எண்ணிக்கையை 4,500 இல் இருந்து 8,500 ஆக அதிகரிப்பதற்கு லேபர் அரசு, 2023 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து விசா விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்தது.