குயின்ஸ்லாந்து, கோல்ட் கோஸ்ட் பகுதியில் நீரில் மூழ்கி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
பிரபலமான நீச்சல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்தவேளையிலேயே, அவர் திடீரென மூழ்கியுள்ளார்.
அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, குறித்த பெண்ணை மீட்டு முதலுதளி அளித்தாலும், அவர் உயிரிழந்துவிட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதத்தில் மாத்திரம் நீரில் மூழ்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22 பேர் கடற்பகுதியிலேயே இறந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.