போதைப்பொருள் கடத்திய சீன சிறுவனுக்கு ஆஸியில் சிறை தண்டனை!
ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் இறக்குமதி செய்து, அதனை மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு கடத்துவதற்கு முற்பட்ட சம்பவம் தொடர்பில் சீன சிறுவன் ஒருவருக்கு ஆறரை வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 வயதான குறித்த சீன சிறுவனுக்கு, பேர்த் சிறார் நீதிமன்றத்தால் மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் 5.4 கிலோ மெத்தாம் பேட்டமைன் போதைப்பொருளை இறக்குமதி செய்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
2024 மார்ச் மாதம் இவர் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்து, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
2024 ஜுன் 25 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.