ஆஸி. விமான பணியாளர்கள்மீது பீஜி நாட்டில் தாக்குதல்: பாலியல் வன்கொடுமை! விசாரணை முன்னெடுப்பு!
பீஜியில் உள்ள சுற்றுலா நகரமான நாடியில் Virgin Australia விமானக் குழுவினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதே மூவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக விமான நிறுவனம், பணியாளர்கள் சிலரை பீஜி நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது.
கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், பெண் பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளுர்வாசிகளே சந்தேக நபர்களாகக் கருதப்படுகின்றனர் எனவும், அவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது எனவும் பீஜி நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சும் அவதானம் செலுத்தியுள்ளார்.