பிரிஸ்பேன் தெற்கிலுள்ள பூங்காவில் குழந்தைமீது கொதிக்கும் திரவத்தை ஊற்றிய நபரை பொலிஸார் தேடிவரும் நிலையில், அவர் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
9 மாதங்களேயான ஆண் குழந்தையொன்று தனது குடும்பத்தாருடன் பூங்காவில் இருந்துள்ளது.
இதன்போதுஅவர்களை நெருங்கிய மர்ம நபரொருவர், குழந்தைமீது சூடான திரவத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனால் குழந்தையின் கை மற்றும் முகப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குழந்தைக்கு உயிராபத்து இல்லை எனக் கூறப்படுகின்றது.
இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சந்தேக நபரை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை தொடர்கின்றது.