குயின்ஸ்லாந்தில் 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த நபர் சிட்னி வடமேற்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சன்ஷைன் கோஸ்டில் 1997 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் திகதி 27 வயதான மீகன் லூயிஸ் ரோஸ் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என அப்போது கருதப்பட்டது. இதனால் விரிவான பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எனினும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் 2009 ஆம் ஆண்டு மீள ஆரம்பமாகின.
இதற்கமைய ரோஸ் கொலைசெய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெரியவந்தது. 2023 ஆம் ஆண்டு அனைத்து சாட்சிகளுடன் இது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபரான கீத் லீஸ் என்பவருக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் தற்போதைய வயது 72 ஆகும்.