பிரிஸ்பேனில் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சகோதரர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
டிசம்பர் 22 ஆம் திகதியே 23 வயதான குறித்த யுவதி இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 29 வயதான கொடி தாம்சன் என்பவரிடமும், 32 வயதான கெய்ன் தாம்சன் என்பவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி இருந்தனர்.
எனினும், மேலதிக விசாரணைகளை தேவைப்பட்டதால் இவரும் குற்றஞ்சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளில் போதுமானளவு ஆதாரங்கள் கிடைக்காததாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். குயின்ஸ்லாந்தில் இருந்து அவர்கள் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்துக்கு தப்பிச்சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அவர்கள் தப்பிச்சென்ற வாகனம் தொடர்பான படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் சந்தேக நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
வடக்கு நியூ சவூத் வேல்ஸில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.