2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றதுடன் இந்த வாய்ப்பை பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3 இற்கு 1 என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
இத்தொடரை வென்றதற்காக பிரதமர் அந்தோனீ அல்பானீஸி உள்ளிட்டவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.