வடக்கு குயின்ஸ்லாந்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 71 வயது மூத்தாட்டியொருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 40 வயது ஆணொருவர் தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று மதியமே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. வயோதிப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது வெப்ப அலையால் ஏற்பட்ட தீ விபத்தாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்குரிய விசாரணை இடம்பெற்றுவருகின்றது.