விக்டோரியாவில், நடைபாதையில் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டார் எனக் கூறப்படும் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன்மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் அவர் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த சிறுவனை இன்று கைது செய்துள்ளனர்.